கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 278 இலங்கையர்கள் இன்று(10) நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 226 எனும் சிறப்பு விமானம் மூலம் இன்று(10) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, ஜப்பான் நாட்டில் இருந்து ஐந்து இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 455 எனும் சிறப்பு விமானம் மூலம் இன்று(10) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், கட்டாரின் தோஹாவில் இருந்து இன்று(10) அதிகாலை 24 வெளிநாட்டு மாலுமிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS