ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தாம் கைவசம் வைத்திருந்த துப்பாக்கி போலியானது எனவும், விளையாட்டு துப்பாக்கி எனவும் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
إرسال تعليق