பதுளை, ஹாலிஎல, நாரக்கல நூறானியா முஸ்லிம் வித்தியாலயத்தை
 சேர்ந்த சுமார் 11 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் எனப்படும் ஆசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


கணிதப்பாடம் நடத்தும் மேற்படி 44 வயதுடை ஆசிரியர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த ஆசிரியருக்கு எதிராக பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்றுவரை சுமார் 11 முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும்  பெண் மாணவி உட்பட 26 மாணவர்கள் வரை மேற்படி ஆசிரியரினால் பாலியல் இம்சைக்கு ஆளானதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS