நேற்று(01) மாலை 06 மணி முதல் இன்று(02) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 131 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 6 ஆயிரத்து 790 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
إرسال تعليق