Breaking

Tuesday, August 27, 2019

அக்குரணை பிரதேச செயலக பிரிவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை.



(மொஹொமட் ஆஸிக்)

அக்குரணை பிரதேச செயலக பிரிவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

அக்குறணை பிரதேச செயலக பிரிவில் இவ்வருடம் இது வரை 75 நோயாளிகள் அடையாளம் கானப்பட்டுள்ளதாகவும் அதில் 59நோயாளிகள் டெங்கு நோயாளிகல் என உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்குறணை பிரதேச சுகாதாரவைத்திய காரியாலயத்தின் நிர்வாக மக்கள் சுகாதார பரிசோதகர் லின்டன் சேனாரத்ன தமிழ் மிரருக்கு தெரிவித்தார். 

அவர்மேலும் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அக்குறணை பிரதேசத்தில் நீரெல்லை,புளுகொஹொதென்னை, வராகஸ்ஹின்னை, தெலும்புகஹவத்தை, கஸாவத்தை, அலவத்துகொடை, ரம்புக்எல கொனகலகல, தெல்கஸ்கொட ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளிகள் அதிக அளவில் பதிவாவதாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப் பிரதேசத்தில் டெங்குநோயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 30 ம் திகதி அக்குறணை பிரதேச செயலக பிரிவு முழுவதிலும் டெங்கு தடுப்புவேலை திட்டம் ஒன்று அமுல் படுத்த உள்ளதாகவும் அன்றைய தினம் அனைத்து வீடுகளுக்கும் விஜயம் செய்து டெங்கு பரவும் வித்த்தில் தமது வீட்டு சூழலைவைத்திருப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages