Breaking

Tuesday, August 27, 2019

இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை - சபாநாயகரின் ஊடக பிரிவு

பதவியில் இருந்து சபாநாயகர் கரு ஜயசூரிய இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சபாநாயகரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

சபாநாயகரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

´2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாமல் ஒரு புதிய பிரதமர் சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத செயன்முறையினூடாக தெரிவானதை போன்று மற்றுமொரு நிலைமை ஏற்பட்டால் தான் வகிக்கும் பதியைவிட்டு விலகுவதாக சபாநாயகர் தெரிவித்தாக சில அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. எனவே சரியான தகவலை அடிப்படையாக கொண்டமையாத இந்த செய்தி முற்றிலும் தவறானது.´ 

சபாநாயகர் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை எனவும் ஆகவே அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் எதிராக அதிகபட்ச நடவடிக்கையை எடுக்க தயங்க போவது இல்லை என்ற நிலைப்பாட்டிலே சபாநாயகர் இருப்பதாகவும் சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறான செய்தியை வெளியிட்ட குறித்த ஊடகத்தின் செயற்பாடு வெறும் ஊகம் மாத்திரமே எனவும் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலைமை போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படும் என சபாநாயகர் ஒருபோதும் நம்பவில்லை எனவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Pages