அல்-கொய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது திகதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றன.
செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கொய்தா கூறுகிறது.
அதாவது, சுமார் 30 வயதானவராக கருதப்படும் ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலி மற்றும் காணொளியை வெளியிட்ட பிறகே அமெரிக்கா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.
இதுகுறித்த தகவல்களை என்.பி.சி மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய ஊடகங்களில் முதலாவதாக வெளியிட்டன.
Post a Comment