எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித அச்சமும் இல்லை எனவும் அதனை வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் எந்த நடவடிக்கைகளையும் எடுப்போம்.

நாம் அன்று பொறுப்பேற்கும் போது எவரும் நினைக்கவில்லை சுதந்திரமான சமூகம் ஒன்றை எம்மால் உருவாக்க முடியும் என்று.

இன்று யாரும் வௌ்ளை வேன்களுக்கு பயம் இல்லை. வௌ்ளை வேன் காலம் முடிந்து விட்டது.

பாராளுமன்ற அமர்வுகளை பார்க்க முடியும். நாங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முடியும்.

மேலும் யோசனைகள் வந்தால் செவிமடுக்க தயார். உடன்பாட்டுக்கு வந்ததும் செயற்படுத்தவும் தயார். என்றார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS