கம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் மேற்கொண்ட நிதியொதுக்கீட்டின் கீழ் கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் அண்மையில் நடப்பட்டது.
பாடசாலை அதிபர் இஸ்வர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment