கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தடயப் பொருட்கள் களஞ்சிய அறையில் இன்று முற்பகல் தீ பரவியுள்ளது.
நீதிமன்ற வழக்குத் தடயப் பொருட்கள் களஞ்சிய அறையில் இன்று முற்பகல் 11.35 அளவில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு சேவைப் பிரிவின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அனுராதபுரம் காவல் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், இந்த தீ சம்பவம் குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச இராசாயன பகுப்பாய்வாளரையும் சம்பவ இடத்திற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
إرسال تعليق