-ஊடகப் பிரிவு-

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கான  உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இன்று (19) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற குறித்த சகல விதமான பொருட்களும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

கிண்ணியாவில் உள்ள சுமார் 15 சங்கங்களுக்கு 13 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.  

சங்கங்கள் பலமாக செயற்படுவதற்கு இக் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
தளபாட உபகரணங்கள், LED மின்குமிழ்கள்,ஊடக உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது

இதில் கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபைகளுக்கு வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்ற செயலணி திட்டம் ஊடாக தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மொத்தமாக  20 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட LED வீதி மின் விளக்குகளும் வழங்கப்பட்டன .

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.


மேலும் இதில்  பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட்,எம்.எம்.மஹ்தி,எம்.டி.ஹரீஸ் மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ராலியா கிண்ணியா நகர செயலாளர் றியாஸ், உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS