“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் குழு” என அழைக்கப்படும் இளைஞர் குழு ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகளின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் களமிறங்குகின்ற நிலையில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் ரஜிக கொடித்துவக்கு இந்த மாத இறுதியில் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறினார்.
அத்தோடு நவம்பர் 17 ஆம் திகதி வரை மட்டுமே பிரேமதாசவை ஆதரிப்போம், அதன் பின்னர் கட்சிக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய ரஜிக கொடித்துவக்கு, தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதேவேளை குமார வெல்கம சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எப்போதும் கூறவில்லை என்றும் அவர் எப்போதும் கோட்டாபயவை ஆதரிக்க மாட்டார் என்றும் ரஜிக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
Post a Comment