Breaking

Wednesday, October 23, 2019

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வெற்றிப் பயணத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்


புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று(22) கருக்காமுனையில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்..


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் தலைமையில் நடை பெற்ற இக் கலந்துரையாடலில் சஜீத் பிரேமதாசவின் வெற்றிக்கான பயணம் தொடர்பில் பேசப்பட்டது..

இதில் அப்பகுதியின் கட்சி ஆதரவாளர்கள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment

Pages