Breaking

Saturday, October 19, 2019

இடைக்கால கணக்கறிக்கை புதனன்று

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.
அதன்படி, அடுத்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை அரச செலவாக 1,474 பில்லியன் ரூபாவை இடைக்கால கணக்கறிக்கையில் உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10.30 முதல் மாலை 6.30 மணிவரை பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதோடு, இதன்போது கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Pages