தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றியின் மூலம் மக்கள் வெற்றியை அடைந்துவிட முடியாது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜேவிபி உட்பட்ட முக்கிய அமைப்புக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பை உருவாக்கி அதன் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்பட்டார்.
இந்தநிலையில் தமது வேட்பாளருக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தொடர்பில் தாம் கவலைக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
எனினும் நாட்டுக்கு தேவையான ஆழமான அரசியல் தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர்கள் நிறைவேற்றமுடியாத பல வாக்குறுதிகளை வழங்கினர். அடுத்தவருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தம்மை பொறுத்தவரை தீவிரவாதத்தில் இருந்து விடுபடும் அரசியல் தளத்தை அமைக்க முடிந்தது.
எனினும் ஏனைய வேட்பாளர்கள் தீவிரவாதம் மற்றும் பயபீதியை தமது வாக்குசேகரிப்பின்போது பயன்படுத்தினர்.
இந்தநிலையில் தாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கையை தொடரப்போவதாக கூறியுள்ள தேசிய மக்கள் சக்தி, எவ்வித சந்தர்ப்பத்திலும் தமது போராட்டத்தை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment