Breaking

Wednesday, November 06, 2019

SLFP தொகுதி அமைப்பாளர்களை விலக்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று(05) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களை விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு(05) மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது.
சுமார் இரண்டு மணித்தியாலயம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, புதிய அமைப்பாளர்களை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment

Pages