Breaking

Sunday, December 15, 2019

அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை

நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்தவுடன் சபாநாயகர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை இது குறித்து தெளிவுப்படுத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைகுழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டதிட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது காலத்தின் தேவை என்பதால் அது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களையும் தெளிவுபடுத்த இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages