Breaking

Sunday, December 15, 2019

எருக்கலம்பிட்டி முஸ்லிம் தனவந்தரை குறிவைத்த மன்னார் DCC


மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஒருங்கிணைப்பதற்காக கடந்த 2019.12.10 ஆம் திகதி மன்னார் கச்சேரியில் நடத்தப்பட்ட கூட்டம் எருக்கலம்பிட்டியில் பலகோடி ரூபா முதலீட்டில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நடத்தி வரும் இறால் பண்ணைத் திட்டத்தை முடக்கும் முயற்சியாகவே இருந்தது.

சிலாவத்துறையில் மக்கள் குடியிருப்பின் மத்தியில் வெளிநாட்டவர் மேற்கொள்ளும் நண்டுப்பண்ணைத் திட்டம் குறித்து எவ்வித கரிசனையும் கொள்ளப்படாத நிலையில் எருக்கலம்பிட்டியில் குடியிருப்பிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் - சுமார் 70 இற்கும் மேற்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்யும் - முறையான அனுமதிகளுடன் முஸ்லிம் தனவந்தர் நடத்தி வரும் இறால் பண்ணைத் திட்டத்தை ஒரு பெரும் தேசத்துரோக காரியமாக சித்திரித்த குழுவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றது ஒரு பெரும் சமூகத்துரோகமாகும்.

குறிப்பிட்ட சிலரின் கௌரவப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக ஒரு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமே வழிநடத்திச் செல்லப்பட்டதும் சரியான நோக்கத்தின் அடிப்படையில் கூட்டம் வழிநடத்திச் செல்லப்படாததும் கவலைக்குரியதாகும்.

ஜனாதிபதி கோதபாய தலைமையிலான SLPP அரசு இதுவரை நேரடியாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக நடந்து கொள்ளாத நிலையில் SLFP தலைமையிலான மன்னார் DCC இன் இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடு புதிய அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அதிருப்தி கொள்ளக் காரணமாகலாம்.

No comments:

Post a Comment

Pages