Breaking

Sunday, January 12, 2020

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார்

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages