Breaking

Thursday, January 23, 2020

ட்ரம்புக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான செனட் சபை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதன் விதிமுறைகள் குறித்து ஜனநாயக கட்சியினருக்கும், குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதியின் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த குற்றச்சாட்டுக்களை டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Pages