Breaking

Friday, January 10, 2020

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

2020 ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று(10) இரவு தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வௌி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது.
இந்த கிரகண நிகழ்வை இலங்கை மட்டுமல்லாது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை பார்த்து முடியும். இன்று இரவு 10.38 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages