Breaking

Friday, January 24, 2020

பொலிஸ்மா அதிபருக்கு ஜானாதிபதியின் பணிப்புரை

கைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லாது வெளி நோக்கங்களுக்காக எவரும் கைது செய்யப்படக்கூடாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீனமாகவும் எந்த பயமுறுத்தல் அல்லது அனுசரணைகளுமின்றி இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிசார் மிகுந்த கவனத்தோடும் சட்டதிட்டங்களை முழுமையாக பேணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages