ஊரடங்கு உத்தரவு காலத்தில் பாரவூர்தியில் சென்றுக்கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் உத்தரவுக்கமைய சுய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபரொருவர் இன்றைய தினம் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின் சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பில் இருந்து பாரவூர்தி ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போதே இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த நபரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தியகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு பகுதியில் கட்டுமானத் தொழிலாளி என்று தெரிவிக்கப்படுகிறது.
إرسال تعليق