Breaking

Tuesday, April 14, 2020

சதுர அல்விஸ் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.

கொரோனா வைரஸ் காரணமாக முழு உலகும் பாதிக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலும், தொலைகாட்சி நிகழ்வுகளினூடு இனவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கும் சதுர அல்விஸ் மற்றும் கடைசி மூன்று நோயாளிகளால் தான் இம்முறை புத்தாண்டு கொண்டாட முடியாது போனது என்று கூறிய பொதுச் சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பேருவளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் பொலிஸ் முறைப்பாடொன்றை மின்னஞ்சலூடாக மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் அதன் பிரதிகளை ஜனாதிபதி,பிரதமர், நீதி அமைச்சர், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Pages