கொரோனா தொற்றைக் காரணம் காட்டியே அங்கு பணியாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவர் ‘Kekirawa News ’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.
இந்த முடிவை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் நிருவாகம் எடுத்துள்ளது.
“முஸ்லிம்களில் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எம்மிடம் கூறிய நிருவாகம், வெவ்வேறு இடங்களில் நாங்கள் தங்குவதையும் காரணம் காட்டி, எம்மை கட்டாய விடுமுறையில் இருக்குமாறு பணித்தது” என்று, அங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஒருவர் கூறினார்
கொரோனா தொற்றுக்கு முஸ்லிம்களை மட்டும் காரணமாகக் குறிப்பிட்டு இவ்வாறான முடிவினை ஐ.ரி.என். நிருவாகத்தினர் எடுத்தமை, அங்கு கடமையாற்றும் முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது” எனவும் அங்குள்ள முஸ்லிம் பணியாளர்கள் கூறினர்.
அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகமொன்றின் நிருவாகம், இவ்வாறு இனமொன்றை இழிவுபடுத்தும் அடிப்படையில் செயற்படுவது கண்டனத்தக்கது என்றும், வசந்தம் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
0 Comments