கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையில், முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம். பின்னர், பிரதமரிடம் உரிய பேச்சு நடத்துவதற்காக தற்போது செல்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த பீ.எச்.எம்.ஜனூஸ் அவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வது தொடர்பில், நேற்று இரவு முழுவதும் உயரதிகாரிகள் மற்றும் அரச உயர்மட்டத்துடன் பல தடவைகள் பேச்சு நடாத்தி, தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும் சாதகமான முடிவு எட்டப்படாத நிலையிலேயே, தற்போது பிரதமரை நேரில் சந்திக்கின்றோம். இன்று காலை முன்னாள் அமைச்சர் பௌசியின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் முன்னாள் எம்.பிக்களான ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், அலிசாஹிர் மௌலான, ஹரீஸ், பைசர் முஸ்தபா உட்பட நானும் கலந்துகொண்டோம்.

இந்த முயற்சி வெற்றியடைவதற்காக அனைவரும் இறைவனைப் பிரார்த்தியுங்கள்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS