சேவைக்கட்டணங்கள் செலுத்தப்படாத கையடக்க தொலைபேசி மற்றும் நிரந்தர தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்காமல் தொடர்ந்தும் இயங்கசெய்ய, சேவைகளுக்கான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை அனைத்து நிரந்தர தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசி வழங்குனர்களுக்கு விடுத்துள்ளது.
இதேவேளை சேவைக்கட்டணங்களை செலுத்தாதோருக்கு ஏப்ரல் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும் ஆணைக்குழு தொலைபேசி நிறுவனங்களை கேட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.
இதனால் பலரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment