குருணாகல் போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த வெலிஸரை கடற்படை முகாமையில் கடமையாற்றும் மேலும் இரண்டு கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்துள்ளார்.
இவர்கள் அலவ்வை மற்றும் பொல்காவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் இருவருடன் குருணாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொறறிய நோயாளிகள் 5 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் கடற்படையினர்.
இந்த மூனறு பேரும் வெலிஸரை கடற்படை முகாமில் கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் வீடுகளுக்கு வந்தவர்கள் எனவும் சந்தன கெந்தன்கமுவ குறிப்பிட்டுள்ளார்.
إرسال تعليق