Breaking

Sunday, April 26, 2020

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து


முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் உள்ள அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக முகாமின் தலைவர் அல்லது பொறுப்பான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக ஆலோசனையைப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

Pages