Breaking

Friday, April 10, 2020

அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்க விசேட வேலைத்திட்டம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டமை காரணமாக பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி பணிக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர்களின் ஊடாக மீன்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான நிதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages