ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் பிற்பகல் முதல் குறித்த பகுதி பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவப் படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நாடாளுமன்றை கலைத்துள்ளார்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை கூட்ட முடியாத சூழ்நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment