களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சிறைக் கைதிகள் 65 பேர், கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை சிறைச்சாலையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் புதிதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும், ஆண் கைதிகளுக்கும் போதியளவான இட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்குமாக, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பெண் கைதிகளை இடம் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர் சுதத் திவாகர மொஹோட்டி தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆண் சந்தேகநபர்கள், பொலிஸாரினால் கைது செய்யப்படுவதினால், அவர்களை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க போதியளவான இடம் இல்லையென்பதனால், பெண் சிறைக் கைதிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS