Breaking

Wednesday, April 29, 2020

அனுராதபுர மாவட்டத்திற்கு இரண்டு வார கால ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

அனுராதபுர மாவட்டத்தில் இரண்டு வார கால ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சந்திராணி பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுர மாவட்டத்தை அதி அபாய வலயமாக அரசாங்கம் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் காலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மாவட்டத்தில் பதினொரு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுராதபுர மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 48 முதல் 72 மணித்தியாலங்கள் வரையில் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு வட மத்திய மாகாணத்திற்கான சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எம். பாலித பண்டார, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுடன் தொடர்புபட்டிருந்தவர்களை கண்டறிவதற்காக இவ்வாறு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

Pages