கெகிராவையில் விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சிறந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் சில மரக்கறிகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக கறிமிளகாய் 150 ரூபா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் 30 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதேபோல் கத்தரிக்காய் 20 முதல் 30 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டு 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக விவசாயிகள் அதிக செலவில் மரக்கறிகளை உற்பத்தி செய்த போதிலும் சிறந்த விலை கிடைக்காமையினால் பெரும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
0 Comments