Breaking

Monday, April 06, 2020

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணி (IYAP) ஆலோசனைக் கலந்துரையடல் : மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 ( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

தேசிய ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP) ஆலோசனைக் கலந்துரையடலொன்றை மட்டக்களப்பில் அண்மையில் மேற்கொண்டது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ் ஆலோசனைக் கூட்டத்தில் 18- 29 வயது வரையான பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.

இளைஞர்களும் சமாதானமும் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் World Vision Lanka மற்றும் இளைஞர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு வலையமைப்பு எனும் அமைப்புக்களை பங்குதாரர்களாக கொண்டு British Council Sri Lanka Active Citizens Programme இன் வலுவூட்டலுடன் இந்த ஆலோசனைக்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் உலகளாவிய ரீதியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்பி வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர் யுவதிகளின் பங்கை மீள வலியுறுத்துவதன் ஒரு பகுதியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP) நிலைத்து நிற்கக்கூடிய சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இளையவர்கள் மத்தியில் ஓர் வலையமைப்பை உருவாக்க இளைஞர் யுவதிகளால் முன்னெடுக்கப்படும் ஓர் அமைப்பாகும்.


No comments:

Post a Comment

Pages