கொள்ளுப்பிட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது  நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை  மீறியதற்காக துமிந்த நாகமுவ உட்பட முன்னிலை சோஷலிச கட்சியியைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோர்ஜ் ப்ளொய்ட்  கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் திகதி ஜோர்ஜ் ப்ளொய்ட் என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார்.
அப்போது குறித்த பொலிஸ் அதிகாரி,அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார். இதில் ஜோர்ஜ் ப்ளொய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.