(சில்மிய யூசுப்)
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள பேலியகொடை எனும் பிரதேசத்தில் சுமார் 3000 மக்கள் வசித்து  வருகின்றனர். தொழிற்சாலை, தனியார் வர்த்தக மற்றும் அரசாங்க கட்டிடங்கள் என்பன இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள கல்வி மட்டங்களை எடுத்துக்கொண்டால் மிகவும் பாரிய வீழ்ச்சியடைந்து வரும் நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என பேலியகொடை ரோகன விகாரையின் விகாராதிபதி உரப்பொல பிரேமசிரி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது அங்குள்ள பாடசாலை மாணவர்களை எடுத்துக்கொண்டால் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கும் வீதத்தைவிட ஐந்து  நாட்கள் தொடர்ச்சியாக பாடசாலை செல்லாத மாணவர்களே அதிகம் காணப்படுகின்றனர். இதற்கு அடிப்படை காரணமாக பொருளாதார பிரச்சினை பெற்றோர்களின் கவனமின்மை என்பன காணப்படுகின்றது.

இங்குள்ள பாடசாலை மாணவர்களை எடுத்துக்கொண்டால் தரம் 9,10,இலேயே இடைநிறுத்தம் செய்கின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இதனால் சாதாரண தரம், உயர்தரத்தில் மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் வீதம் குறைவடைந்து செல்கின்றது.

இவ்வாறு பாடசாலைக்கு மாணவர்களின் ,இடைவிலகள் அதிகரித்து செல்வதற்கான காரணங்களை ஆராயும்போது, இந்த பிரதேசத்தில் அதிகமான தொழிற்சாலைகள் நிறுவனங்கள் ,இருப்பதனால் அதிக 
வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றது. தொழில் தகைமைகள் தேவையற்ற முறைசாரா தொழில்களில் வருமானங்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதனால் அது பாடசாலை மாணவர்களை 
ஈர்க்கின்றது. எனவே இவர்கள் வார இறுதி நாட்களில் தொழில் செய்ய ஆரம்பித்து படிப்படியாக பாடசாலையை விட்டு முற்றாக விலகும் நிலை காணப்படுகின்றது. 

இப்பிரதேசத்தில் அதிகமான தாய்மார்கள் பிள்ளைகளை தன் கணவரிடம் அல்லது தமது வயோதிப பெற்றோர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்கின்றமையும் 
ஒரு பாரிய பிரச்சினையாக உறுவெடுத்துள்ளது.

பிள்ளைகள் முறையான பராமரிப்பில் இல்லாமல் 
பாடசாலையை விட்டும் இடை விலகுவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக காணப்படுகின்றது. மேலும் போதைப்பொருள் பாவனைக்கும் சிறு வயதிலேயே அடிமையாகுவதற்கும் இதுவும் ஒரு காரணமாகும். இது ஒரு சமூக பிரச்சினையாக தற்போது உறுவெடுத்து வளர்ந்து வருகின்றமை 
அபாயகரமானதாகும். 

குறிப்பாக அப் பிரதேசத்திற்கு வெளியே காணப்படும் அழகு உள்ளே செல்லும்போது காணக் கிடைப்பதில்லை. மேலும் இப் பிரதேசத்தைப்பற்றி குறிப்பிடுகையில் பங்களாவத்தை, முறுகன்வத்தை தெல்கடவத்தை, கானுவத்த போன்ற இடங்களில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் பரவலாக நடைபெற்று 
வருகின்றமையும் கவலைக்குறிய விடயமாகும் என விகாராதிபதி மேலும் தெரிவித்தார்.



பேலியகொடை பிரதேசத்தின் மற்றுமொறு பாரிய பிரச்சினையாக சூழல் மாசடைதல் பிரச்சினையும் 
ஒன்றாகும்.

இங்கு காணப்படும் பல தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் மற்றும் மாசுகள், மீன் சந்தைகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றங்கள் காரணமாக இங்குள்ள மக்கள் பெரிதும் 
அசௌகரியங்களுக்கும், நோய்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு சமுகத்துக்குள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மறைந்து காணப்படுகின்றன. 

இவ்வாறான சமூக பிரச்சினைகளை இணங்கண்டு அவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, தீர்வு கண்டு அவர்களின் வாழ்வில் செழிப்பூட்டுவதற்காக செயல்பட வேண்டியது ஊடகவியலாளர் என்ற 
வகையில் எமது தார்மீக பொறுப்பாகும்.

எனவே, பேலியகொட என்ற இப் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அவர்களது சுமுகமான, மகிழ்வான வாழ்விற்கு உதவி செய்யுமாறு இந்த பிரச்சினைகளுடன் 
தொடர்புடைய அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம். 



Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS