(..காதிர் கான்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ (11) சனிக்கிழமை கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனகண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் .எல்.எம்பாரிஸ் தெரிவித்தார்
அன்றைய தினம் காலை 10 மணிக்கு வேட்பாளர் பிறந்த ஊரான எலமல்தெனிய விற்கு சமூகம் அளிக்கும் ஜனாதிபதிக்குஉடுநுவர தொகுதி பொதுஜன பெரமுன ஆதரவாளர்களினால்எலமல்தெனிய தேர்தல் பிரசார பிரதான காரியாலயத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளதுஇதேவேளைகாலை 10.30 மணிக்கு உடுநுவர அலபலாவல விளையாட்டு மைதான வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுன வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயம் குறித்து வேட்பாளர் பாரிஸ் கருத்துத் தெரிவிக்கும் போதுஅன்றைய தினம் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்து கொண்டுகண்டி மாவட்ட மக்களுடன் கலந்துரையாடவுள்ளார்இதன் போது கல்விசுகாதாரம்காணிஅபிவிருத்தி உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS