கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்கரப்பட்ட தலைமன்னார் படப்படி மற்றும் தலைமன்னார் கிராமம்போன்ற பகுதிகளுக்கு பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்றது
2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தலைமன்னார் படப்படி கிராமத்திற்கான கிறவள் பாதை மற்றும் தலைமன்னார் கிராமத்திற்கு 1 மில்லியன் பெறுமதியான தார் வீதியும் அமைக்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியோக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்
மேலும் இந்நிகழ்வில் தேசிய இளைஞர்சேவைகள் மன்ற வன்னி மாகாணப் பணிப்பாளர் முனவ்வர் பிரதேச சபை உறுப்பினர் புனிதா மற்றும் கிராம இணைப்பாளர் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது


إرسال تعليق