முஸ்லிம் மக்கள் பற்றி ஏனைய மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் சில குறித்த சிங்கள ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன. அவை புதிய விடயமல்ல. இக்கால கட்டத்தில் ஆட்கொல்லி கொரோனாவை சில குறித்த ஊடகங்கள் இனவாதமாக மாற்றிச் செயற்படுகின்றனர். அதற்கு அக்குறணை மக்கள் மனம் தளர்ந்து துவண்டு விடக் கூடாது. இச்சந்தர்ப்பத்தில் சிங்கள ஊடகக் கொரோனாவுககு முகம் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அக்குறணை மக்கள் அதிகாரிகளை மதிக்காமல் நடப்பதாகவும் கொரோனா நோயாளர்கள் ஒழிந்து கொண்டு இருப்பதாகவும் இன்னும் எத்தனையோ பொய்யான செய்திகளை பரப்புரைகளை முன் வைக்கின்றனர். அவையாவும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய விசயம் என முன்னாள் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
அக்குறணைப் பிரதேச மக்களைப் பொறுத்தவரையிலும் அடுத்தவர்களுக்கு உதவுதில் நல்ல மனப்பாங்கை கொண்ட மக்கள். மனிதாபிமானச் செயற்பாட்டில் முன் மாதரிமிக்கவர்கள். சுனாமி அனர்த்தம், கொலன்னாவை வெள்ள அனர்த்தம். யுத்த காலத்தில் மூதூர் மக்கள் வெளியேற்றம், டெங்கு ஒழிப்;பு வேலைத் திட்டம் இன்னும் எத்தனையோ அரசாங்கத்தின் பொதுவான செயற்பாடுகளுக்கு பாரியளவு ஒத்துழைப்பை வழங்கக் கூடியவர்கள் என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் எம்மால் சொல்ல முடியும்.
அக்குறணையில் அடையாளம் காணப்பட்ட நபர் மார்ச் மாதம் 15 ஆம் திகதி அளவில் வந்தவர். அப்போது இந்தியாவில் வருகை தந்த நபர்களை சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வில்லை. இது தொடர்பில் இப்பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்தி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கு அறிவார்கள்.
அவை மட்டுமல்ல இந்த விடயம் தொடர்பில் எமது பிராந்தியததிலுள்ள மக்கள் சுகாதார அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இணுராவப் பொறுப்பதிகாரிகள் பிரதேச செயலாளர்களுடன் தினசரி சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன். ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகின்றேன்.
கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கான அனுமதி வழங்குதல், நோயாளிகள் மருந்து வகைகள் பெற்றுக் கொடுத்தல் போன்ற இன்னோரன்ன அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுக் கொள்வதற்கான ஒழுங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில பகுதிகளில் அத்தியாவசியப பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.
இவை தவிர அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் பிராந்தியத்திலுள்ள சகல பள்ளிவாசல்கள் மூலமாகவும் வழங்குவதற்கு இங்குள்ள செல்வந்தர்கள் முன் வந்துள்ளார்கள்.
எது எவ்வாறியினும் குறித்த சிங்கள ஊடகங்களினால் இன வெறுப்புணர்வூட்டும் பரப்புரைக்கு அக்குறணை மக்கள் அஞ்சிவிடத் தேவையில்லை. அவர்கள் எப்பொழுதும் தமது அரச கட்டுப்பாடுகளை ஒழுக்கங்களையும் பேணி நடக்கக் கூடியவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விடயம் தொடர்பில் அப்பிராந்தியத்திலுள்ள பொது சுகாதார மருத்துவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் அக்குறணை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் என அத்தனை பேரும் எமக்காக சான்று பகரக் கூடியவர்கள் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
إرسال تعليق