Breaking

Friday, August 02, 2019

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் சாட்சியமளிக்கும் போது பொன்சேகா – சுமந்திரன் முறுகல்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரிடையே சூடான வாதங்கள் எழுந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து பயங்கரவாதிகளும் இதுவரையினால கைதுகளில் முழுமையாக கைது செய்யப்படவில்லை என இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் சரத் பொன்சேகா நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தார்.
பொன்சேகாவின் குறித்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுமந்திரன் இது விசேட தெரிவுக் குழுவின் நிலைப்பாடு இல்லை என எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
இவற்றினை சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த இராணுவத் தளபதி சிரித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment

Pages