சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விடைபெற்ற நட்சத்திர வீரர் லசித் மாலிங்க, தனது நண்பரான நுவன் குலசேகரவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியை கண்டுகளிப்பதற்காக ஆர்.பிரேமதாச மைதானத்துக்கு இன்று வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்காக பிரியாவிடை போட்டியொன்றை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றின் மூலம் நுவன் குலசேகர கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த போட்டியை நுவன் குலசேகரவுக்கு கெளரவம் அளிக்கும் முகமாக அவரின் பெயரில் சமர்ப்பணம் செய்யப்பட்ட போட்டியாக நடத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS