யாழில் உள்ள பிரதான கல்லூரி ஒன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்ய முயற்சிக்கப்பட்ட போது தப்பித்துக் கொண்ட குறித்த அதிபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது அவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(பிரதீபன்)
Post a Comment