ஏ.எம்.றிசாத்-

மன்னார் மாவட்ட ஜம் இய் யத்துல் உலமாவின் ஏற்பாட்டில்  நாளை  காலை (21) 09.00 மணிக்கு மன்னார் மூர் வீதி ஜும்மா மஸ்ஜிதில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜம் இய் யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதாக மன்னார் மாவட்ட  ஜம் இய் யத்துல் உலமாவின் செயலாளர் அஷ் ஷேக் அஸ்ரப் முபாரக் தெரிவித்தார்.

உலமாக்கள் தமது பிரதேசங்களில் சமூகத்தை ஜும்மாக்களின் மூலமும் இதர தஹ்வாக்களின் மூலமும் எவ்வாறு கட்டியெழுப்புதல்,பள்ளி நிர்வாகிகளின் பங்களிப்புடன்  கிராமங்கள் மற்றும் பிரதேசங்களையும் எவ்வாறு வழிநடாத்துதல், துறைசார்ந்தவர்களின் ஊடாக முஸ்லீம் சமூகம் பெறவேண்டிய நன்மைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் பிறமத சகோதரத்துவத்தை எவ்வாறு பேணிப்பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுதல் எனும் தலைப்புக்களில்  இந்த கருத்தரங்கில் ஆராயப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS