தேர்தலை நோக்காக வைத்து, நன்மைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டது. எனினும் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த தடை நீக்கப்பட்டமை மிகப்பெரிய தவறாகும். என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகத்தை மறைக்கும் தலைக்கவசமோ புர்காவோ நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பு என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிக்காப், புர்கா மற்றும் தலைக்கவசம் மீதான தடையை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு தேசிய பாதுகாப்பு பிரச்சனை என்று இலங்கை சுதந்திரக் கட்சி கூறுகிறது.
முகத்தை மூடிக்கொண்டு போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர், தற்கொலைதாரிகள் மற்றும் பாதாள குழுவினருக்கு சாதகமாகலாம். மேலும் இதனால் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி ஏனையவர்களுக்கும் இதனால் இனத்தினருக்கும் பாதிப்பு என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
0 Comments