Breaking

Thursday, September 19, 2019

ஜாகிர் நாயக் பேசியது அரசியல் நகர்வா?

ஜாகிர் நாயக் இவ்வாறு பேசியதை ஓர் அரசியல் நகர்வாகக் கருதுவதாக மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர் மதம் குறித்தும், மற்ற சரியான விஷயங்கள் குறித்தும் ஜாகிர் நாயக் பேசுவதை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. ஆனால் அவரோ மலேசியாவில் இனவாத அரசியலில் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் தெரிவித்ததார்.
மேலும், இது ஜாகிர் நாயக்கின் தவறான நகர்வு. இனவாத உணர்வுகளைத் தூண்டியதால் காவல்துறை அவரை விசாரிக்க வேண்டியுள்ளது. எத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். சட்டத்தின் ஆட்சியை மலேசிய அரசாங்கம் மதிக்கிறது என பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages