Breaking

Sunday, September 15, 2019

பாகிஸ்தானில் முதன்முறையாக பொலிஸ் அதிகாரியாக இந்து பெண் நியமனம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பொலிஸ் துணை சப் இன்ஸ்பெக்டராக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முறை நியமிக்கப்பட்டுள்ளார்.
புஷ்பா கோஹ்லி எனப்படும் இப்பெண் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இத்தகவலானது டுவிட்டர் மூலம் மனித உரிமைகள் நல ஆர்வலர் கபில் தேவ் என்பவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரியில் இந்து மதத்தைச் சேர்ந்த சுமன் பவான் போதானி என்ற பெண் முதன் முறையாக பாகிஸ்தானில் பெண் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இவரும் மிகவும் வறிய நிலையில், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத சூழலில் வளர்ந்து பல கஷ்டங்களையும், சவால்களையும் தாண்டி இந்த நிலமைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages