இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவுக்கு ஒருவருடம் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி காலி மைதானத்தில் நிறைவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி சந்தேகமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிசோதனை நடத்தியிருந்தது.
இதுவரையில் 6 டெஸ்ட் போட்டிகளில் 33 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அகில தனஞ்சய, 37 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 51 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS