(அகமட் எஸ். முகைடீன்)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி ஆர். ஆயிஷா ஹனீன் 191 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம் உள்ளிட்ட வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் இன்று (7) திங்கட்கிழமை தாறுல் உலூம் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் செய்து வலயத்தில் முதலிடம் பெற்ற அம்மாணவியை பாராட்டி பரிசில் வழங்கி கௌரவித்தனர்.

அத்தோடு தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். கலீல் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியைகளான திருமதி எம்.எம். நசீர், திருமதி எஸ்.எப்.எம். யூசுப் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டடி வாழ்த்தினர்.

இப்பாடசாலையில் 55 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை 9 மாணவர்கள் பெற்றுள்ளதோடு 70 இற்கு மேலான புள்ளிகளை 52 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS