(நபாஸ் நெளபர்)
பொதுஹரயைச் சேர்ந்த மரஹூம் சதகதுல்லாஹ் அவர்களின் மகன் சப்வான் நேற்று முன்தினம் விஷேட அதிரடிப்படையின் PC யாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தனது 12 வது வயதில் தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் 3 சகோதரர்களுடன் மினுவங்கெட இல் வாழ்ந்து வந்தார்.
தனது கல்வி நடவடிக்கைகளை பொதுஹர கிரி /மெத்தேகெடிய முஸ்லிம் மஹா வித்தியாலயம், மினுவங்கெட மெல்லபொத முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் கெகுணகொல்ல தேசியப் பாடசாலையில் மேற்கொண்டார். பல்வேறு கஷ்டங்களுக்குப் பின் இந்த நிலமையை அடைந்த இவர் இன்றைய இளைஞர்கள் பலரிற்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறார். இவருடைய எதிர்காலம் சிறப்புற எமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
Post a Comment